செய்தி விவரங்கள்

வித்தியா வழக்கு;ட்ரயல் எட்பார் விசாரணை இன்று முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் எட் பார் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

ட்ரயல் எட்மார் முறைப்படி இன்றைய தினம் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

வழக்கின் ஆரம்பவுரையை பதில் சட்டமா அதிபர் டபிள்யூ.டீ. லிவேரா நிகழ்த்தவுள்ளார்.

மாணவி வித்தியா கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் புங்குடுதீவு பிரதேசத்தில் பாடசாலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட விசாரணையின் ஊடாக 12 சந்தேக நபர்க் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் குறித்த சந்தேக நபர்களில் 10ஆவது மற்றும் 12ஆவது நபர்கள் சட்டமா அதிபரின் சிபாரிசுக்கு அமைய வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

11ஆவது சந்தேக நபர் சட்டமா அதிபரது உறுதிக்கு அமைய அரச தரப்பு சாட்சியாளராக மாற்றப்பட்டதுடன் இந்த வழக்கில் ஏனைய 9 சந்தேக நபர்ளுக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப் பகிர்வுப் பத்திரத்தை சட்டமா அதிபர் தயார் செய்திருந்தார்.

மேலும் இந்த வழக்கினை விசேட ட்ரயல் எட்பார் நீதிமன்ற முறையில் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறியதற்கு அமைய மூன்று நீதிபதிகளை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரியிருந்தார்.

இதன்டி பிரதம நீதியரசர் தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ். மேல் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் தொடக்கம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தொடர் வழக்கு விசாரணையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு