செய்தி விவரங்கள்

வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்!

வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருவெற்றி; மஸ்தான் எம்.பி. பெருமிதம்!


வன்னியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு கானாத பெருவெற்றி என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் தாமரை மொட்டு பிரிந்து தனியாக போட்டியிட்ட பின்னரும் 24 275 வாக்குளைப் பெற்று 31 ஆசனங்களை சுதந்திர கட்சி கைப்பற்றியுள்ளது என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் இதுவே இப்பகுதியில் முதன் முதலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெறும் அதிக பட்ச ஆசனங்களாகும். வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 14 388 வாக்குளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சிக்கு அடுத்தபடியான நிலையில் அது உள்ளது. 31 ஆசனங்களில் 27 ஆசனங்கள் சுதந்திர கட்சிக்குரியதாகவும், 4 ஆசனங்கள் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்ட பா.உதயராசா தலைமையிலான ஸ்ரீரெலோ கட்சிக்குரியதாகவும் உள்ளது.

இதன்படி வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகர சபையில் 3 ஆசனங்களையும், வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் 4 ஆசனங்களையும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 5 ஆசனங்களையும், வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.  

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையில் 1 ஆசனத்தையும், மன்னார் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், மாந்தை மேற்கு பிரதேச சபையில் 3 ஆசனங்களையும், நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளில் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் அது வென்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும், கரைதுரைப்பற்று பிரதேச சபையில் 1 ஆசனத்தையும், மரைதம்பட்டு பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் அது கைப்பற்றியுள்ளது. மேலும் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடைந்திருக்கும் வெற்றி தொடர்பில் ஜனாதிபதியும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார் என மஸ்தான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு