செய்தி விவரங்கள்

வட்டக்கச்சியில் இரு பிள்ளைகளின் தாய்க்கு கத்தி குத்து

வட்டக்கச்சியில் இரு பிள்ளைகளின் தாய்க்கு கத்தி குத்து

வட்டக்கச்சியில் இரு பிள்ளைகளின் தாய் கத்தி குத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சியில் இரு பிள்ளைகளின் தாய்க்கு கத்தி குத்து

கிளிநொச்சி வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டம் பகுதியில் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று மதியம் 12 மணியளவில் கத்தி குத்துக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் கத்தி குத்துக்கு உள்ளான பெண் 24 வயதை உடைய பாஸ்கரன் நிரோஸா எனவும் தெரியவந்துள்ளது. இறந்த பெண்ணுக்கு ஏழு வயது மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளதாகவும், கணவன் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வட்டக்கச்சியில் இரு பிள்ளைகளின் தாய்க்கு கத்தி குத்து

இதனடிப்படையில் கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த வேளை இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பெண் வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் சடலமாக அயலவர்களால் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

வட்டக்கச்சியில் இரு பிள்ளைகளின் தாய்க்கு கத்தி குத்து

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தஇராமநாதபுரம் பொலிஸார் பெண்ணின் சடலத்தை கிளிநொச்சி அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு