செய்தி விவரங்கள்

‘பாஜக கட்சிக்காரங்கனா பெரிய ஆளா’ -தெறிக்கவிட்ட உ.பி பெண் போலீஸ்.!

உத்திர பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் தங்கள் கட்சியின் ஆட்சியானது நடைபெற்றுவருகிற காரணத்தால், எளிய மக்களின் மீது பாஜகவினர் தொடர்ச்சியாக அராஜகத்தினை கட்டவிழுத்துவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் புலன்ஷார் எனுமிடத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்தால் பாஜகவினரை போலீசார் பிடித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பாஜகவினர் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டதோடு, பாஜகவினருக்கு ஆதரவாக பிரமோத் லோதி என்பவர் போலீசாருடன் வாக்குவாதம் நடத்தினார். அவர் அப்பகுதி பாஜக பஞ்சாயத்து தலைவரின் கணவர் ஆவார்.

காவல்துறை உயர் அதிகாரி தாகூர் உடனடியாக அவ்விடத்துக்கு வந்ததோடு, சட்டம் யாவர்க்கும் பொதுவானதுதான் உங்களுக்கு மட்டும் என்ன விலக்கா அளிக்கப்பட்டுள்ளது என கேள்வியெழுப்பினார். மேலும் முதல்வரிடம் சென்று உங்கள் வாகனங்களை சோதனையிடாமல் இருக்க கடிதம் வாங்கி வாருங்கள் எனவும் துணிவாக பேசினார்.

ஆளும் கட்சியை சார்ந்தவர்களை காவல் துறை பெண் அதிகாரி ஒருவர் நேர்மையான முறையில், எந்த அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் விசாரித்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு