செய்தி விவரங்கள்

உதயங்கவை அழைத்து வர தொடர்ந்தும் ராஜதந்திர நடவடிக்கைகள்

துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு அழைத்து வர தொடர்ந்தும் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உதயங்கவை அழைத்து வர தொடர்ந்தும் ராஜதந்திர நடவடிக்கைகள்

மிக் ரக விமானக்கொள்வனவு  ஊழல் தொடர்பில் தேடப்படும் உதயங்க வீரதுங்க கடந்த மாதம் துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

எனினும் அவரை இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சிகள் இதுவரை கைக்கூடவில்லை.

குறிப்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நாடு கடத்தல் உடன்படிக்கையும் இதில் கைக்கொடுக்கவில்லை.

இந்த நிலையில் உதயங்கவை இலங்கைக்கு அழைத்து வர ஐக்கிய நாடுகளின் ஊழல்களுக்கு எதிரான சாசனத்தை பயன்படுத்த முடியும் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு