செய்தி விவரங்கள்

வடக்கின் அரச அதிகாரிகள் நொத்தாரிசுகளாகச் சத்தியப்பிரமானம்

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர்  நொத்தாரிசுகளாகச் சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர் .

வடக்கின் அரச அதிகாரிகள் நொத்தாரிசுகளாகச் சத்தியப்பிரமானம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று அவர்கள்  சத்தியப்பிரமானம் செய்துள்ளனர்.

வடக்கின் அரச அதிகாரிகள் நொத்தாரிசுகளாகச் சத்தியப்பிரமானம்

ஸ்ரீலங்கா நிர்வாக சேவையில் அதிசிறப்புத் தரத்தை உடைய அதிகாரிகளான வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சுப்பிரமணியம் முரளிதரன் சட்டக்கல்வியை நிறைவு செய்து உயர் நீதிமன்றில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்

இந்த நிலையில்  சட்டத்தரணிகள் இலட்சுமணன் இளங்கோவன், சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கு நொத்தாரிசு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு பதிவாளர் நாயகத்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நொத்தாரிசுகளாகச் இன்று காலை  சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர் .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு