செய்தி விவரங்கள்

இரண்டு மணிக்குப் பின்னர் மழை பெய்யும் சாத்தியம்


மேல், சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களின், சில பகுதிகளில் இன்று கடுமையான மழை பெய்யும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை,மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை, மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்  இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தென்மேற்கு பருவக்காற்று மழையுடனான காலநிலை, நாளைய தினத்தின் பின்னர் தற்காலிகமாகக் குறைவடையக் கூடும் எனவும் வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு