செய்தி விவரங்கள்

வடக்கில் பெண்கள் மீது படையினரின் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன; அருட்.நிக்கலா

வடமாகாணத்தில் இராணுவத்தினரால் தொடர்ந்தும் தமிழ் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக படையினரால் அவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்சகோதரி நிக்கலா தெரிவித்தார்.

ஜெனீவாவில் 36ஆவது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் அமர்வு இடம்பெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்காவின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட 90 அமைப்புக்கள் இணைந்து ஸ்ரீலங்காவில் காணப்படுகின்ற மனித உரிமை நிலவரம் பற்றி தயாரித்திருக்கும் இந்த அறிக்கையை ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ளனர்.

இந்த அறிக்கையில் கைச்சாத்திட்டிருக்கும் உறுப்பினர்கள் இணைந்து கொழும்பில் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு