செய்தி விவரங்கள்

நாட்டில் தொடரும் மழை – வறட்சியால் 6 இலட்சம் பேர் வரை பாதிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தொடரும் மழை – வறட்சியால் 6 இலட்சம் பேர் வரை பாதிப்பு

வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டமே தொடர்ச்சியாக அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 68 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வட மாகாணத்தில் மொத்தமாக 72 ஆயிரத்து 486 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 51 ஆயிரத்து 449 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 163 பேரும், யாழ்ப்பாணத்தில் 79 ஆயிரத்து 314 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 112 பேரும், வவுனியாவில் 17 ஆயிரத்து 926 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 934 பேரும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் இரவு நேரத்தில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சப்கரமுவ, மத்திய மாகாணங்களில் மாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனவும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு