செய்தி விவரங்கள்

மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றப்படாத பெயர்ப்பலகை-சமூக ஆா்வலா்கள் கவலை!

மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றப்படாத பெயர்ப்பலகை-சமூக ஆா்வலா்கள் கவலை!

வவுனியா புகையிரத நிலையத்தின் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் மும்மொழி கொள்கை சரியாக பின்பற்றபடவில்லை என்று பொது அமைப்புகளும் ,சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்

வவுனியா புகையிரத நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள பெயர்பலகையில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ள அந்தவாசகத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் மிகவும் பெரிதாகவும் தமிழ் ,ஆங்கில மொழிகளில் மிகவும் சிறிதாகவும் காணப்படுகிறது.

90 வீதமளவில் தமிழ் மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் தமிழ் மொழியையே முன்னிலைபடுத்தவேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளதுடன்இல்லாவிடில் 3 மொழிகளையுமே ஒரே அளவில் பொறித்திருக்கலாம் என்று விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரசகரும மொழியாக தமிழ் மொழி இருக்கும் பட்சத்தில் பெரும்பான்மையாக தமிழர் வாழ்கின்ற பகுதியிலேயே இவ்வாறான நிலைமை காணப்படுவது இன நல்லிணக்கத்திற்கும்,ஒற்றுமை தன்மைக்கும் கேடு விளைவிப்பதாகவே அமையும்.

எனவே இதனை சம்பந்தபட்டவர்கள் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படுவதை தடுக்கும் முகமாக அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இது தொடர்பாக வவுனியா புகையிரத நிலைய அதிபரிடம் கேட்டபோது.....

இந்த பெயர்ப்பலகை ஒரு தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் அமைத்து தரப்பட்டது என்றும் அவர்களிடம் நாம் இதனை மாற்றி தரும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் அதனை மாற்றியமைக்க கூடியதாக இருக்கும் என உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு