செய்தி விவரங்கள்

திருக்கோவில் மஹா சிவராத்திரி நந்திக் கொடி அணிவிக்கும் நிகழ்வு

திருக்கோவில் மஹா சிவராத்திரி நந்திக் கொடி அணிவிக்கும் நிகழ்வு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு உலக சைவப் பேரவையினால் இன்று செவ்வாய்க்கிழமை (13) அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் ஆதீனத்தில் நந்திக் கொடி அணிவிக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

திருக்கோவில் மஹா சிவராத்திரி நந்திக் கொடி அணிவிக்கும் நிகழ்வு

இந்நிகழ்வில் விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகர சர்மா அவர்கள் பூசை வழிபாடுகளை நடத்தியிருந்ததோடு, அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் ஆதீனப் பணிப்பாளர் இறைபணிச் செம்மல் கண. இராஜரெத்தினம், உலக சைவப் பேரவையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர்சுவாமிய ஆலய வண்ணக்கருமான வ.ஜயந்தன் ஆகியோர் சைவ அடியார்களுக்கு நந்திக் கொடியை அணிவித்து நந்திக் கொடியின் சிறப்புக்கள் தொடர்பாக் உரையாற்றி இருந்தனர்.

திருக்கோவில் மஹா சிவராத்திரி நந்திக் கொடி அணிவிக்கும் நிகழ்வு

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச இந்து ஆலயங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து இருந்தனர்.

திருக்கோவில் மஹா சிவராத்திரி நந்திக் கொடி அணிவிக்கும் நிகழ்வு

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு