செய்தி விவரங்கள்

உண்டியலை தூக்கி குடல் தெறிக்க ஓடிய கொள்ளையா்...!

உண்டியலை  தூக்கி  குடல்  தெறிக்க  ஓடிய  கொள்ளையா்...!

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் பத்தினி அம்மன் கோயில் ஒன்றின் உண்டியலை நேற்றையதினம் (12-03-2018) திங்கட்கிழமை இரவு திருடிக் கொண்டு சென்ற நபரை இன்றையதினம் துரத்திச் சென்று கைது செய்திருப்பதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தரே இச்சம்பவத்தின்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தளவாய் பத்தினி அம்மன் ஆலயத்தின் பூசகர் செய்த பொலிஸ் முறைப்பாட்டை தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது.....

கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் தன்னை மூடி மறைத்த ஆடையை அணிந்திருந்த நபர் கோயிலுக்குள் இருந்த உண்டியலை திருடிக் கொண்டு வெளியே சென்றுள்ளாா்.

இந்த நிலையில் குறித்த நபா் வருவதைக் கண்ட ஆலய பூசகர் டோர்ச் லைற்றை எரிய வைத்தபோது அந்நபர் ஆக்ரோஷமாக என்னைக் கடந்து சென்றுள்ளாா்.

உடனே 119 எனும் அவசர பொலிஸ் தொலைபேசி உதவிச் சேவைக்கு அழைத்து விபரத்தை தெரியப்படுத்தியதும், சில நிமிடங்களுக்குள் தளவாய்க் கிராமத்திற்கு விரைந்த பொலிஸார் உண்டியலோடு தப்பியோடிக் கொண்டிருந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இந்நபர் திருகோணமலை வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் என்றும் இவர் சமீப சில நாட்களாக மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய்ப் பிரதேசத்திற்கு வந்து தான் வேறொரு திருமணம் செய்யப் போவதாகக் கூறி ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பத்தினியம்மன் உண்டியலில் இருந்து ஆயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகளும் தாள்களும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு