செய்தி விவரங்கள்

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட 3 கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு பிரதேசத்தின் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நபர் ஒருவர் பல வருடங்களின் பின்னர் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்யும் போது அங்கு புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளைக் கண்டுள்ளார்.

பின்பு சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கைக்குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த கைக்குண்டுகள் பொலித்தின் பையில் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு