செய்தி விவரங்கள்

போராட்டங்கள் ஜனநாயக செயற்பாடுகளாக அமைய வேண்டும்: இராதாகிருஸ்ணன்

போராட்டங்களை நடத்துவதும், கருத்துகளை வெளியிடுவதும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளாக அமைய வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து பொது சொத்துகளை சேதமாக்கிய சம்பவம் தொடர்பில் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

நுவரெலியா – இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான சம்பவம் மீண்டும் நாட்டில் இடம்பெறாத வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு