செய்தி விவரங்கள்

முதலையிடம் கையை பறிகொடுத்த சாப்ட்வேர் என்ஜினீயர்!!

சில சமயங்களின் நாம் விளையாட்டு தனமாக செய்யும் செயல்கள் விபரீதமாக முடிவதுண்டு. இதற்கு எடுத்துக்காட்டாய் சமீபத்தில் பெங்களூரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு இந்திராநகரை சேர்ந்தவர் முதீத் தத்தவாடே. தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுஷித்ரா சர்மா. இருவரும் ஆனேக்கல் வனப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு கனகபுராவை அடுத்த தத்தேகெரே ஏரிக்கரைக்கு சென்றனர். ஏரியில் நாய்களை குளிக்க வைப்பதற்கு முயற்சித்தனர். முழங்கால் வரை இருந்த நீரில் நின்றபடி நாயை முதீத் குளிப்பாட்டியுள்ளார்.

அப்போது நீருக்குள் இருந்த முதலை, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் இருந்த இடத்திற்கு வந்து, முதீத் மீது பாய்ந்தது. இதில் அவரது இடது கையை முழங்கைக்கு மேலே முதலை கடித்து துண்டித்தது. பின்னர் ஒருவழியாக முதலையிடம் இரு்ந்து தப்பித்த அவர், மனைவியின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்தார்.

ஏரியில் முதலைகள் இருப்பதாக எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். அதை வாசித்த பிறகும் முதீத், தடையை மீறி நாயை குளிப்பாட்டுவதற்கு ஏரியில் இறங்கியதால் இந்த விபரீதம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு