செய்தி விவரங்கள்

தக்காளியுடன் சேர்ந்து சட்னியான பாம்பு - தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா மாநிலம் கானாபுராவை சேர்ந்தவர் கொள்ளு ராஜம்மா. இவர் சமீபத்தில் வீட்டில் சட்னி அரைக்க தக்காளி மற்றும் மசாலா பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தார். அப்போது தவறுதலாக தக்காளியோடு ஒரு குட்டி பாம்பும் சுருண்டு படுத்துள்ளது. அதனை ராஜம்மா கவனிக்கவில்லை. அப்படியே மிக்சியில் போட்டு அரைத்து விட்டு, அதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் காலை உணவோடு சேர்த்து கொடுத்துள்ளார். அவர்களும் சாப்பிட்டு சென்று விட்டனர்.

பின்னர் அதனை வயலில் வேலை பார்க்கும் பெரிய மகனுக்கும் கொடுத்து அனுப்பி உள்ளார். சட்னியை சாப்பிடும்போது பெரிய மகனுக்கு பாம்பின் வால் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சட்னியை ஆராய்ந்து பார்த்தபோது அதில் பாம்பின் பாகங்கள் கிடைத்துள்ளது. இதனால் பீதி அடைந்து உடனடியாக மருத்துவரை அனுகி பரிசோதனை செய்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு