செய்தி விவரங்கள்

மஹிந்தவிற்கு ஆதரவா ? அமைச்சர் கூறுவது இதுதான்

ஸ்ரீலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் மஹிந்த அணியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மை இல்லை என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் விஜித் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அப்பாவிகள் யாரையாவது ஏமாற்றி தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரே இவ்வாறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் விஜித் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்றைய தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸாவிடம் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எட்டு பேர் விரைவில் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மஹிந்த அணியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அவ்வாறு எவரும் விலகப் போவதில்லை என்று குறிப்பிட்டதுடன் மஹிந்த அணியினரே இவ்வாறான பொய் பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் அப்பாவிகளான யாரையாவது ஏமாற்றி அவர்கள் பக்கம் ஈர்த்துக்கொள்ள மஹிந்த அணியினர் பல சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் சொய்ஸா ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்காததை அடுத்து குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முக்கியஸ்தர்கள் விரைவில் தமது அணியில் என்று பிரசாரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this article

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு