செய்தி விவரங்கள்

நீர்கொழும்பில் இன்று விசேட அதிரடிப்படையினர் மீதான தாக்குதல் காணொளி இதோ!

நீர்கொழும்பில் இன்று மாலை STF எனப்படும் விஷேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத ஆயுததாரிகளினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தினால் அந்தப் பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸாரும் படையினரும் அப்பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த ஆயுதக் குழுவினர் வந்த வாகனத்தினைச் சுற்றி வளைத்த அதிரடிப் படையினர் அதனுள் இருந்த நால்வரை நீண்ட நேர சண்டையின் பின்னர் கைது செய்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட துப்பக்கிச் சண்டையில் ஆயுததாரிகள் இருவர் காயமடைந்திருந்தாலும் அதிரடிப் படையினருக்கு எவ்வித சேதமிம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நேரடிச் சண்டையின் காணொளி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு