செய்தி விவரங்கள்

பாடசாலை விதிகளை பின்பற்றினால் பிரச்சினைகள் இல்லை - சம்பந்தன்

பாடசாலை விதிகளுக்கு அமைவாக செயற்படும் பட்சத்தில் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை விதிகளை பின்பற்றினால் பிரச்சினைகள் இல்லை - சம்பந்தன்

திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரி அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதம் கிடைக்கப்பெறாத நிலையிலும், அதற்கு இரா.சம்பந்தனால் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் மார்க்க நம்பிக்கையைப் பின்பற்றும் வகையில் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்தமை தொடர்பில் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஹபாயா அணிந்து பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டாமென அதிபர் வழங்கிய அறிவுறுத்தலையடுத்தே இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. 

இதனையடுத்து ஆசிரியர்களும் அவர்களது உறவினர்களும் கல்லூரி அதிபருடன் முரண்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி பழைய மாணவர்கள் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து ஆசிரியைகளுக்கும், அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்க, கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமையைத் தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரி அமைச்சர் ரிஷாத் பதியூதீன் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதம் கிடைக்கவில்லை என தெரிவித்த இரா சம்பந்தன், ஊடகங்கள் மூலம் முழு விபரங்களை அறிந்து அதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்  பாடசாலை விதிகளை பின்பற்றி செயற்பட்டால்  பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு