செய்தி விவரங்கள்

சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் கோரிக்கை

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு – கருநாட்டுக்கேணி கிராமத்தில் வசித்து வரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு பெண் தலைமைத்துவம் வகிக்கும் 65 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மருதம் என்ற அமைப்பின் கீழ் 07 குழுக்களாக இயங்கி வருகின்றனர்.

இவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு புலம்பெயர் உறவுகள் உட்பட ஏனையோரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு