செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா மருத்துவர்கள் மனிதர்களா? சுகாதார அமைச்சருக்கு இப்படியொரு சந்தேகம்

ஸ்ரீலங்காவில் மனிதநேயம் இல்லாத மருத்துவர்களே அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

சைட்டம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக அரச மருத்துவர்கள் போராட்டம் நடத்தியுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

வரையறுக்கப்பட்ட Celogen Lanka நிறுவனத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் ஜனாதிபதியினால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

கண்டி - பல்லேக்கலயில் நிர்மாணிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட இந்த நிறுவனதத்தின் புதிய மருந்து உற்பத்தி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“வாழ்க்கை என்பது இறுதித்தருணத்தில் மிகவும் புதுமைமிக்கதாகும். இதை புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் இன்று மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர்கள். மனிதாபிமானமும், மருத்துவ விஞ்ஞானமும் இடையே இப்படிப்பட்ட வித்தியாசமே காணப்படுகின்றது. இன்று இருக்கும் மருத்துவர்களிடையே மனிதர்கள் எத்தனைபேர் உள்ளனர்? பணத்தை மட்டுமே பார்க்கின்றனர். இவர்களிடையே சிறந்த மருத்துவர்களும் இருக்கின்றனர். மருத்துவபீட மாணவர்களை அதிகரிப்பதற்கு சம்ரகமுவ, மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களில் புதிதாக மருத்துவப் பீடங்களை ஆரம்பிக்கவுள்ளோம். ஆனால் தனியார் மயப்படுத்துகின்றோம் என விமர்சிக்கின்றனர். சுகாதாரத்திற்காக இவ்வளவு தொகையை ஒதுக்கிய அரசாங்கம் இதுவரையிலும் இருந்ததில்லை. நானும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராக கடமையாற்றியிருந்தவன். ஆனால் இன்றுபோல் உள்ள உடைத்துக்கொண்டு உள்ளே செல்லும் மாணவர்களாக இருக்கவில்லை. இவ்வளவாக செலவு செய்கையில் இலவசக் கல்வி குறித்து எங்களுக்கே பாடம் கற்பிக்க வருகின்றனர். மனிதர்களின் உயிரை காசு பணத்தில் மதிப்பீடு செய்ய ஒருபோதும் முடியாது” என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு