செய்தி விவரங்கள்

எதிர்பார்த்தபடியே யாழில் தற்போது கடும் மழை கொட்டுகிறது!

தற்பொழுது யாழ்ப்பானத்தின் பல பிரதேசங்களிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பொழிந்து வருகிறது.

நாட்டின் பல மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு தென்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது வட மாகாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்றைய தினம் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாலும் சில சந்தர்ப்பங்களில் கடுங்காற்றுடன் கூடிய காலநிலை நிலவலாம் என எதிர்வுகூறியிருந்த நிலையில் இரவுப் பொழுதில் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரித்திருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு