செய்தி விவரங்கள்

புதுக்குடியிருப்பில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டவர் மீது தாக்குதல்!

புதுக்குடியிருப்பில் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டவர் மீது தாக்குதல்!

விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் தேர்தல் நாளான 10 ஆம் நாள் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் காண்காணிப்பில் ஈபட்டவர் மீது சுயேச்சை குழு வேட்பாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலாளி 13.02.18 இன்று புதுக்குடியிருப்பு பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் தேர்தல் நாள் அன்று மாணிக்கபுரம் பகுதியில் வசிக்கும் வெ.சிவகரன் என்பவர் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரின் எதிர்வீட்டில் சுயேச்சைக்குழுவில் போட்டியிட்ட சந்திரமேனன் என்ற வேட்பாளரின் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் வேறு கட்சியின் ஆதரவாளர்கள் வீதியில் வெடிகொழுத்தி போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

இதனை ஆத்திரத்தில் கொண்டு சுயேச்சை குழுவின் வேட்பாளாராக போட்டியிட்ட சந்திரமேனன் என்பவர், கபே அமைப்பில் கண்காணிப்பில் ஈடுபட்ட சிவகரன் தான் வெடிகொழுத்தி போட்டுள்ளதாக முரண்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்பேது சிவகரன் தலையில் காயடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள் இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக 13.02.18 இன்று புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலாளி சந்திரமோகனை கைதுசெய்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் மேலதிகமாக புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு