செய்தி விவரங்கள்

புதுமாத்தளன் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடைய 5 பேருக்கு சிறைத்தண்டனை!

புதுமாத்தளன் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடைய 5 பேருக்கு சிறைத்தண்டனை!


புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கடந்த 09.02.18 அன்று இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வொட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5பேர் காயமடைந்த  நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் புதுமாத்தளனில் வசிக்கும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கத்திவெட்டு வாள்வெட்டில் மாறியுள்ளது. இதில் இரு குடும்பத்தினை சேர்ந்த 05 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவு மனiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

புது மாத்தளனை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 26 அகவையுடைய பிரான்சிஸ் இளவந்தன், 28 அகவையுடைய பிரான்சிஸ் வசந்தகுமார், இவர்களின் தாயாராக 49 அகவையுடைய பி.ஆனந்தசோதி மற்றும் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்த 42 அகவையுடைய ரவீந்திரராசா விக்டோரியா 45 அகவையுடைய ரவீந்திரராசா ஆகிய ஜவரும் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள்.

இவர்களின் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தநிலையில் 12.08.18 அன்று மாவட்ட மருத்துவ மனையில் இருந்த ஜவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன்போது இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய இவர்கள் 5பேரும் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அங்கு இவர்களுக்கு ஏதாவது மருத்து தேவை ஏற்படின் அதனை வவுனியா சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு