செய்தி விவரங்கள்

உமா ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பண்டாரவளை  நகரில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, உமா ஓயா திட்டத்தினால் நீர் ஊற்றுக்கள் வற்றியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பண்டாரவளை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி இன்றைய தினம் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தால் தமது வீடுகளுக்கும், சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிப்புகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தும், சேதங்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிட்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும்  உமா ஓயா திட்டத்தால் 4000 கிணறுகள் வரை வற்றியுள்ளதாகவும், இதனால் பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பண்டாரவளை நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உமா ஓயா திட்டமானது 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு