செய்தி விவரங்கள்

பாதையை புனரமைத்து தாருங்கள் – மஹியங்கனையில் பாரிய ஆர்ப்பாட்டம்

மஹியங்கனை - கதுருவெல கிராம மக்கள், பொது அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றில்  ஈடுபட்டுள்ளனர்.

சதுன்புர முதல் பம்பறவான வரையான வீதியை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பாதையை புனரமைத்து தாருங்கள் – மஹியங்கனையில்  பாரிய ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை - கதுருவெல கிராமத்தில் மக்கள், பொது அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் இணைந்து நேற்று வியாழக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளனர்.

சதுன்புர முதல் பம்பறவான வரையான வீதி பல வருடங்களாக பாவனைக்குட்படுத்த  முடியாத நிலைமையில் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்களால்  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தம்மிடம் ஆணையைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள்  வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மஹியங்கனை - கதுருவெல பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த மஹியங்கனை பொலிஸார் மக்களுடன்  கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு