செய்தி விவரங்கள்

யானைகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்குமாறு வலியுறுத்தி செட்டிகுளத்தில் போராட்டம்

யானைகளின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு வலியுறுத்தி வவுனியா – செட்டிகுளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

செட்டிகுளம் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதுடன் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகின்றனர்.

வவுனியா - செட்டிக்குளம் பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி செட்டிகுளம் கமநல சேவை திணைக்களத்திற்கு முன்னால் உள்ளூர் நேரப்படி இன்று கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கடந்த காலங்களில் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு யானைகளால் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள் தொடர்ந்தும் ஏற்பட இடமளிக்காது, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் யானைகளின் மேச்சல் நிலமாக செட்டிக்குளம் மாறினால் பொருளாதாரத்தில் எவ்வாறு முன்னேற்றம் அடைவது?, வில்பத்து சரணாலயமா செட்டிகுளம் சரனாலயமா அரசே பதில் சொல், திட்மிட்டு எமது வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கி மக்களை பட்டினி போடாதே, இறக்காதே இறக்காதே எமது பிரதேசத்தில் யானைகளை இறக்காதே என்பன போன்ற கோசங்களை எழுப்பியவாறு செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்றனர்.

அத்துடன் பேரணியின் நிறைவில் செட்டிகுளம் பிரதேச செயலக கிராம சேவை தலைமைப் பீட உத்தியோகத்தர் சு.ஞானேஸ்வரனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு