செய்தி விவரங்கள்

இலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அங்கு அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது.

இலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி

இரண்டு குழந்தைகள் சகிதம் உள்ள இலங்கையின் தமிழ் குடும்பமே நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது.

இதனை எதிர்த்து அவுஸ்திரேலியா பென்டிகோவில் உள்ள ஹர்கிரேவெஸ் என்ற இடத்தில் இந்த அமைதிப்பேரணி நடத்தப்படுவதாக பென்டிகோ எட்வைசர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த பேரணியின் மூலம் நாடு கடத்தலை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் தமிழ் குடும்பத்துக்கு தமது ஆதரவு வெளிப்படுத்தப்படும் என்று பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் காரணமாக, இலங்கை குடும்பத்தினர் புலம்பெயர்ந்து குயின்ஸ்லேன்ட் பிலோலவில் குடியேறினர்.

எனினும் வீசா முடிவடைந்த நிலையில் அவர்கள் நாடு கடத்தலுக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை நாடு கடத்தவேண்டாம் எனக்கோரி 96 ஆயிரத்து 700 உள்ளுர் மக்கள் தமது கையொப்பங்களுடன் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு