செய்தி விவரங்கள்

தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி நிலையில் இன்று 120 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

138 குடும்பங்கள் தமக்கு சொந்தமான காணிகிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டதை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றையதினம் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் வழங்கியிருந்தனர்.

எனினும் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு