செய்தி விவரங்கள்

நுவரெலியா மாக்கஸ்தோட்ட தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு தீ வைப்பு!

நுவரெலியா மாக்கஸ்தோட்ட தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு தீ வைப்பு!


நுவரெலியா மாக்கஸ்தோட்ட தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் தீ வைத்ததுடன், செய்தி சேகரிக்க சென்ற பத்தனை பிரதேச செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா மாக்கஸ்தோட்ட தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு தீ வைப்பு!

நுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாக்கஸ் தோட்டபகுதியில் உள்ள சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியதாவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாகவும், தீ வைப்பு சம்பவத்தினை செய்தி சேகரிக்க சென்ற பத்தனை பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி  மேற்கொள்ள பட்டதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 13.02.2018 செவ்வாய் கிழமை இடம் பெற்றுள்ளதோடு தீ வைப்பு சம்பவம் 12.02.2018. திங்கள் கிழமை இரவு இடம் பெற்றதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை தீ வைக்கபட்ட சிறுவர் நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பளாகி உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

நுவரெலியா மாக்கஸ்தோட்ட தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு தீ வைப்பு!

இதனடிப்படையில் இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பொபி என்பவர் வெற்றியீட்டியதை அடுத்து இ.தொ.கா.சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியடைந்தமைக்கு, இ.தொ.கா .ஆதரவாளர்கள் சிலர் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்ருக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில், ஏழுவாக்குகள் வித்தியாசத்தில் தாம் தோல்வியடைந்த காரணத்தினால் ஒருவர் தாக்கபட்டு காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியா மாக்கஸ்தோட்ட தோட்டத்தில் சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு தீ வைப்பு!

மக்கஸ்தோட்ட பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு குறித்த தோட்டபகுதியை சேர்ந்த மக்கள் இரண்டு நாட்களாக தொழிலுக்க செல்லாமல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் நுவரெலியா மாக்கஸ் தோட்டத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களையும், சிறுவர் நிலையத்திற்கு தீ வைக்கபட்ட சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யபடவில்லையெனவும், நுவரெலியா பொலிஸார் அசமந்த போக்கில் செயல்படுவதாக மாக்கஸ் தோட்டமக்கள் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 13.02.2018. செவ்வாய்கிழமை காலை 20பேர் கொண்ட குழுவொன்று மாக்கஸ் தோட்ட அதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலும், குறித்த தோட்ட அதிகாரி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒனறினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. குறித்த தோட்டபகுதியில் உள்ள சிறுவர் பாரமரிப்பு நிலையத்திற்கு தீ வைக்கபட்டதினால், சிறுவர் நிலையத்திற்கு முன்பாக அமைக்கபட்ட நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்று முற்றாக எரிந்துள்ளதால், அந்த தோட்டபகுதி மக்களுக்கு குடிநீரினை பெற்று கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அம் மக்கள் தெரிவித்தனர். எனவே நுவரெலியா மாக்கஸ்தோட்ட பிரச்சினைக்கு மலையக அரசியல் தலைவர்களும், சம்பந்த பட்ட அதிகாரிகளும், உரிய நடவடிக்கை எடுக்கபட வேண்டுமெனவும் மாக்கஸ்தோட்ட மக்கள் தெரிவித்தனர்.





சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு