செய்தி விவரங்கள்

தேர்தல் வெற்றியீட்டியோர் - அபிவிருத்திகளில் அக்கறையுடன் செயற்படவேண்டும்!

தேர்தல் வெற்றியீட்டியோர் - அபிவிருத்திகளில் அக்கறையுடன் செயற்படவேண்டும்!

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதேசசபைகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கிராம அபிவிருத்திகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படவேண்டும் என வடமாகாண முதலமைச்சர்சி. வி. விக்னேஸ்வரன்அறிவுறுத்தியுள்ளார்.

வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகல்லூரி மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் இறுதியில் உரைநிகழ்த்திய முதலமைச்சர் கடந்த வருடம் வடமாகாண கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மிகக்குறைவாக காணப்பட்டது என்று தெரிவித்தார்.

எமக்கு கிடைக்கக்கூடிய நிதிவளங்களை மக்கள் பங்களிப்புடன் இணைந்து விரைவாக முன்னேற நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்திடம் இருந்து யாவற்றையும் பெறமுடியாத நிலையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு