செய்தி விவரங்கள்

மஹிந்தவின் எழுச்சியை தவிர்க்க முடியாத சர்வதேசம் – நிலவரம் நிகழ்ச்சியில் உரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 9 ஆண்டு கால ஆட்சி மீண்டும் உருவாகுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

மஹிந்தவின் எழுச்சியை தவிர்க்க முடியாத சர்வதேசம் – நிலவரம் நிகழ்ச்சியில் உரையாடல்

மைத்திரி – ரணில் நல்லாட்சியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாக பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், இராணுவத்தின் சோதனை கெடுபிடிகள், வெள்ளை வேன் அச்சம் கடந்த மூன்று ஆண்டுகளாக இருக்கவில்லை.

இந்த நிலையில், மீண்டும் மஹிந்தவின் ஆட்சி ஏற்படும் என நினைக்கும் போத மக்கள் மத்தியில் பல ஏக்கங்கள் காணப்படுகின்றன.

சர்வதேச நாடுகளால் உருவாக்கப்பட்ட மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கம் 3 ஆண்டுகளில் பலவீனமடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஷ போன்ற இனவாத கொள்கை அவர்களிடம் மறைமுகமாக இருந்தமையும் ஒரு காரணம்.

தேர்தல் தோல்வியின் பின்னர் கூட மைத்திரி – ரணில் அதை உணரவில்லை என்பதையே அவர்களுடைய கருத்துகள் வெளிக்காட்டுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்று செவ்வாயக்கிழமை வரை மைத்திரியும் – ரணிலும் சந்தித்து பேசுகின்றார்கள்.

என்ன பேசுகின்றார்கள் நல்லாட்சியில் தோல்விக்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த போதிலும் இவர்கள் என்ன பேசுகின்றார்கள்?

தமிழ் மக்களுடைய இன பிரச்சினை, 30 ஆண்டு கால யுத்தம் முடிந்த பின்னரும் தீர்க்கப்படாமையால் தான் இந்த அரசியல் அவல நிலைக்கு காரணம் என்பதை மைத்திரி – ரணில் மாத்திரம் அல்ல. ஏனைய சிங்கள கட்சிகளும் இதுவரை உணரவில்லை.

அல்லது தெரிந்தும் மூடி மறைக்கின்றார்களா அதற்கு என்ன காரணம் – ஐ.பி.சி.தமிழ் வாணொலியில் இன்று இடம்பெற்ற நிலவரம் நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் அ.நிக்ஸன் மற்றும் அலுவலக செய்தியாளர் டாஷிணி புஸ்பராஜ் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு