வழுக்கு மரத்திலிருந்து கைதவறி வீழ்ந்த வீரர்! புத்தாண்டு விழாவில் சம்பவம்!
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகம் நேற்று(15-04-2018) நடாத்திய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடீரென கை தவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில்வீழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று(15) நடைபெற்ற சித்திரைப்புத்தாண்டு கலாசார விளையாட்டுவிழாவில் இடம்பெற்றது.
சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்து இடுப்பு தரையில் அடிபட வீழ்ந்ததால் பலத்த என்புமுறிவுகள் உள்ளாகியுள்ளாா்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.....
விளையாட்டு விழாவில் வழுக்குமரம் ஏறும் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சுமார் 30அடி உயரமான குறித்த வழுக்கு மரத்தில் முதலாவதாக தவராசா என்ற நபா் விரைவாக ஏறியுள்ளாா்.
இதன்போது மேலிருந்த கிறீசை வழித்துவிட்டு தான் கட்டிய கயிற்றை பிடித்தபோது கயிறு திடிரென எதிர்பாராதவகையில் அறுந்ததனால் நிலைதடுமாறி கை தவறி கீழே விழுந்துள்ளாா்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் நின்ற காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கிரு. ஜெயசிறில் உடனடியாக
விரைந்து தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தாா்.
இதன்போது வைத்தியா்கள் விரைந்து செயற்பட்டதால் உயிருக்கு ஆபத்தில்லை என தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.
கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கேட்டபோது......
குறித்த வீரரை ஸ்கன்செய்த வைத்திய அதிகாரிகள் உயரத்திலிருந்து வீழ்ந்ததனால் இடதுகால் தொடை எலும்பு முற்றாக உடைந்த அதேவேளை ஏனைய என்புகளும் சிறுசிறு உடைவுகள் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டனர்.
பல்முறிவுகள் என்பில் ஏற்பட்ட காரணத்தினால் அவரை என்பு வைத்திய நிபுணர் உள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைத்தோம். அங்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
தலையில் அடிபடவில்லை. இடுப்பும் அதுசார்ந்த பகுதிகளும் இந்த என்பு முறிவுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவே உயிருக்கு ஆபத்தில்லை என்றார்.
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
- Apr 27 / 2018
-
சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
-
-
-
-
-
முல்லைத்தீவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்; விடுதலைப்புலிகள் மறைந்திருக்கலாம் என அச்சம்?
உள்நாடு 21 Apr, 18 21 Apr - +1
-
-
சமீபத்திய காணொளிகள்
-
பிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்! கானொளி உள்ளே!
உலகம் Apr 27, 2018 -
மே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை!
உள்நாடு Apr 26, 2018 படிக்க -
வேலூர் கோட்டையில் மதுகுடித்து கல்லூரி மாணவிகள் கும்மாளம்!
உள்நாடு Apr 25, 2018 படிக்க -
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இரா.சம்பந்தன் இறுதி எச்சரிக்கை!
அரசியல் Apr 25, 2018 படிக்க -
அஜித் ஷாலினியின் வாழ்க்கையில் இப்படி ஒரு விஷயமா.? இது தான் உண்மை காதலா.?
பிரபலங்கள் Apr 24, 2018 படிக்க -
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே இருப்பார் – அசாத் சாலி உறுதி
உள்நாடு Apr 23, 2018 படிக்க -
லோன் கேட்டு மனு கொடுத்த சுப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி
பிரபலங்கள் Apr 22, 2018 படிக்க -
பெண் பிள்ளைகளின் பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு .!
மனநலம் Apr 17, 2018 படிக்க -
கோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா
அரசியல் Apr 21, 2018 படிக்க -
Comments