செய்தி விவரங்கள்

'சபரிமலை ஐயப்பன் கோவில் தங்ககொடிமரம் சேதம்'- முதல்வர் எச்சரிக்கை.!

ஆண்டுதோறும் அதிக அளவிலான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய, புண்ணிய தலமாக விளங்கி வருகிறது கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில். தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், சுமார் 9 கிலோ மற்றும் 161 கிராம் எடையுள்ள தங்க தகடுகளுடன் புதிய கொடி மரம் உருவாக்கப்பட்டது. இந்த புதிய கொடிமரத்தின் பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது.

கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது நேரத்தில் கொடிமரத்தின் அடிப்பகுதி சேதமடைந்திருப்பது தெரியவந்தது. அதற்கான காரணம் என்னவென அறிந்திட ஆலயத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிடுகையில், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் ரசாயனம் கலந்த துணியை கொடிமரத்தின் மீது வீசி கொடிமரத்தை சேதப்படுத்துவது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்க கொடிமரத்தை சேதப்படுத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது என கேரள முதல்வர் தோழர்.பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு