செய்தி விவரங்கள்

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டடம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4, 5 மற்றும் 6 ஆம் தரத்திலான பயிற்சி கற்கைநெறிகளை கற்று வருகின்றனர்.

இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்ற நிலையில், தற்பொழுது 144 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இவ்வருடத்தில் மேலும் 400 மாணவர்கள் இங்கு கற்கை நெறிக்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தவேண்டியுள்ளது.

மேலதிகமாக 400 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்தப் பயிற்சி நிறுவனத்தில் புதிய தங்குமிட கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திறன் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு