செய்தி விவரங்கள்

சிங்ககள கட்சிகள் வடக்கு கிழக்கில் வாக்கு கேட்க தகுதியற்றவர்கள்

யுத்தத்தின் போது தமிழ் மக்களை கொன்று குவித்த ஸ்ரீலங்காவின் தேசிய கட்சிகள் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் வாக்கு கேட்டு வருவதற்கு தகுதியற்றவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சாடியுள்ளது.

வடக்கு கிழக்கில் பல தமிழ் விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெறுவதற்கு ஸ்ரீலங்காவின் தேசிய கட்சிகளின் கொடுமைகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்ககள கட்சிகள்  வடக்கு கிழக்கில் வாக்கு கேட்க தகுதியற்றவர்கள்

மட்டக்களப்பு – திருப்பழுகாமத்தில் தமிழ் தேசிய .கூட்டமைப்பின் கிளைக் காரியலயம் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதிதி தவிசாளர் இ.பிரசன்னா, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் கோ.கருணாகரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் வடக்கு கிழக்கில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு காரணம் ஸ்ரீலங்காவின் சிங்களத் தலைமைகளைக் கொண்ட கட்சிகளே என குற்றம் சுமத்தினார்.

யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மறைவிடத்தை காட்டிக் கொடுத்த தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி, யுத்தத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பதிலாக, தமிழர் விடுதலை கூட்டணி இருந்திருந்தால் யத்தம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று எவ்வாறு கூற முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சிங்ககள கட்சிகள்  வடக்கு கிழக்கில் வாக்கு கேட்க தகுதியற்றவர்கள்

இந்த நிகழ்வில் கலந்தக்கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள்  விவசாயத் துறை அமைச்சர் கி.துரைராசசிங்கம், ஸ்ரீலங்காவில் தமிழர்கள் தங்களின் அடையாளங்களுடன் வாழ வேண்டும் என்றால் சமஷ்டி ஆட்சி தேவை என பல வருடங்களுக்கு முன்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

சிங்ககள கட்சிகள்  வடக்கு கிழக்கில் வாக்கு கேட்க தகுதியற்றவர்கள்

இதேவேளை சிங்கள கட்சிகளின் பிரிவினவாதத்திற்கு தமிழ் மக்கள் விலை போகக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இ.பிரசன்னா வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு