செய்தி விவரங்கள்

முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கையைஎம்.எச்.எம் நைவ்பர் நிராகரிப்பு!

முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கையைஎம்.எச்.எம் நைவ்பர் நிராகரிப்பு!


முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் சார்பாக முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என்கின்றார் சாய்ந்தமருது பிரதேச சுயேட்சை குழுவின் தலைவர் எம்.எச்.எம் நைவ்பர்.

முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கையைஎம்.எச்.எம் நைவ்பர் நிராகரிப்பு!

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் சார்பாக முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என்கின்றார் சாய்ந்தமருது பிரதேச சுயேட்சை குழுவின் தலைவர் எம்.எச்.எம் நைவ்பர் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையின் சார்பாக சாய்ந்தமருது பிரதேசம் சார்பாக சுயேட்சையாக தோடம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு ஆசனங்களை கைப்பற்றியது. அதன் பின்னர் நன்றி செலுத்தும் வாயிலாக நேற்று 12 திகதி சாய்ந்தமருது பெரிய ஜீம்மாப்பள்ளியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கையைஎம்.எச்.எம் நைவ்பர் நிராகரிப்பு!

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று நாம் ழூன்று மாதங்கள் போராடிய போராட்டத்திற்கு ஒரு முடிவு வந்துள்ளது எந்த அரசியல் கட்சியின் தலையீடுகள் இன்றி, எமது பிரதேசத்தில் சுயேட்சையாக சாய்ந்தமருது மக்களது விருப்பின் பேரில் களமிரங்கி 06 ஆசனங்களை கைப்பற்றியுள்ளளோம். அந்தவகையில் நாம் கேட்டதற்கு இணங்க எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கான நகரசபை கட்டாயம் பிரித்தெடுக்கும் வரை நமது போராட்டம் தொடரும், அத்துடன் நேற்றைய தினம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த செய்தியின் பிரகாரம் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் அவர்கள் எங்களிடம் பொதுவான வேண்டுகோளை விடுத்துள்ளார். அது என்னவென்றால் கல்முனை மாநகரசபையினை அமைப்பதற்கு நிபர்ந்தனையற்ற கோரிக்கையின் பிரகாரம் மேயர் பதவியினையும் தந்து, எல்லாவிதமான வசதிகளையும் தருகின்றோம் என வாருங்கள் என்றார் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் அம்பாறை இறக்காமத்தில் கூறியிருக்கின்றார் கல்முனை மாநகரசபையினை சுயேட்சைக்குழுவிற்கு அமரவிடமாட்டோம் என்று அப்படி சொன்ன தலைவர் நேற்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றார். இவரது கோரிக்கையை எமது ஊர் மக்கள் சார்பாகவும் பள்ளிவாசல் சார்பாகவும் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். அத்துடன் எமது இந்த வெற்றிப்பயணத்திற்காக உழைத்த அனைத்து பிரதேச வாழ் மக்களுக்கும் வர்த்தகசங்கம் பொது அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என தனது கருத்தினை நிறைவு செய்தார்.

முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கையைஎம்.எச்.எம் நைவ்பர் நிராகரிப்பு!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு