செய்தி விவரங்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்!

 

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் நேற்று காலை RPG வகை குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்கிழக்கு பகுதியில் பிரான்சிஸ் காந்தி என்பவரது வீட்டுக்கு அருகிலுள்ள காணியில்  குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அதில் இருந்த இந்த குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பினால்அருகில் பல வீடுகள் இருந்த போதும் வீடுகளில் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை  எனவும் , யாரும் காயமடையவில்லை எனவும்  தெரிவிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் பிரதேசமக்களினால் குப்பை சேகரித்து குறித்த இடத்தில் அதற்கு தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது எனினும் அருகில் மக்கள் யாரும் இல்லாத நிலையில் உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்படவில்லை.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்!

இது குறித்து கருத்து தெரிவித்தமக்கள், இந்த வெடிப்பு சம்பவாமானது யுத்தகாலத்தில் தம்மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாகவும், இறுதி யுத்த காலத்தில் பல்வேறு பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த நாம் மீண்டும் அச்சத்துக்குள்ளாகியுள்ளோம் என தெரிவிப்பதோடு, தம்மை மீள் குடியேற்றம்செய்யும் போது குறித்த பகுதி கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட போதும், தொடர்ச்சியாக வெடிபொருட்கள் வெடிப்பது, மீட்கப்படுவதும் இடம்பெற்றவண்ணம் உள்ளது. குறிப்பாக நேற்றைய சம்பவம் பாரிய அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட கண்ணிவெடியகற்றும் நிறுவனங்கலோ, அதிகாரிக்கோ விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு
கோருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு