செய்தி விவரங்கள்

முல்லைத்தீவு செல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வபுரம் மக்கள் இன்று(14) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.

நேற்று குறித்த சுடலைப்பகுதியில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள், மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்பவுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தடுத்து அரச அதிகாரிகளோடு முரண்பட்டுள்ளாா்.

முல்லைத்தீவு செல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

இதனை தொடர்ந்து குறித்த கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மீது முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்ககோரியும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணக்கோரியும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மக்க[ள் பிரதி நிதிகள் ஜவரை அழைத்து மாவட்ட செயலாளர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு செல்வபுரம் மக்கள் மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு