செய்தி விவரங்கள்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு - அமைச்சரவை அங்கீகாரம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நெவில் பெர்ணான்டோ தனியார் வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கும், சைட்டம் நிறுவனத்தின் முகாமைத்துவத்தை விரிவுபடுத்துவதற்கும் இதன் மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை பங்குச் சந்தைக்கு வழங்குவதா அல்லது பொறுப்பு மன்றத்தின் கீழ் கொண்டுவருவதா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக  எதிர்காலத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தாதிருக்கவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வைத்திய நிபுணர்கள் சங்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் மருத்துவ சபைக்கிடையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு