செய்தி விவரங்கள்

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் மைத்திரி – ரணில் சந்திப்பு!

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் மைத்திரி – ரணில் சந்திப்பு!

அமைச்சரவையில் நாளை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசமின் மாமனாரான வடமேல் மாகாண முன்னாள் அமைச்சர் பி.எம். விஜேநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர்கள் பலரும் குருநாகலில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று விஜயம் செய்திருக்கின்றனர்.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று பகல் சென்றிருந்தனர்.
அஞ்சலி செலுத்திய இருவரும் அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் உரையாடிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் மைத்திரி – ரணில் சந்திப்பு!

அமைச்சரவை மாற்றத்திற்கு முன் மைத்திரி – ரணில் சந்திப்பு!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு