செய்தி விவரங்கள்

தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க மஹிந்த அணி தீர்மானம்!

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலை நடத்த முன்வருவரானால் அதற்கு தேவையான திருத்தங்களின் பொருட்டு நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பை வழங்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க மஹிந்த அணி தீர்மானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றியீட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப் பூர்வ இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. எதிர்கால அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு