செய்தி விவரங்கள்

வடக்கில் அசாதாரண சூழ்நிலை : யாழ். செல்லும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்.!

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடக்கின் நிலவரம் குறித்து அண்மையில் இராணுவத் தளபதி கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இச் சந்திப்பின் போது வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளுமாறு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இம்மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் அஸ்கிரிய பீடாதிபதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு