செய்தி விவரங்கள்

பங்காளி கட்சிகளை நாம் புறக்கணிக்கவில்லை : நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

பங்காளி கட்சிகளை நாம் புறக்கணிக்கவில்லை : நாடளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களில் தமிழரசு கட்சியை தவிர ஏனையவர்கள் ஆயுத குழுக்களில் இருந்து வந்தவர்கள், அதற்காக நாம் அவர்களை புறக்கணிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(07) வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.....

தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பினர் புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளோம்.அவ்வாறன நாம் கேவலமாக ஆசன பங்கீட்டாக்காக பிரிந்து செல்லும் நிலைக்கு வந்தது துரதிஸ்டமானது அதற்காக நான் தக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சியை தவிர பங்காளிகளாக உள்ளவர்கள் ஆயுத குழுக்களாக இருந்து வந்தவர்கள். ஆனால் தமிழரசு கட்சி அவ்வாறு இருந்து வந்ததில்லை. அதற்காக நாங்கள்  பங்காளி கட்சிகளை புறக்கணிக்க மாட்டோம்.

அவர்களுடன் சேர்ந்து பயணிக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். ஆனாலும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற போறேன் என நிற்பவர்களை நாம் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு