செய்தி விவரங்கள்

தொடர் மழையின் எதிரொலி - கன்னியாகுமரி மாவட்ட பள்ளி; கல்லூரிகளுக்கு விடுமுறை.!

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில், மழை தீவிரமடைந்துள்ளது. கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் அதிகப்படியான மழைபெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும்,அம்மாவட்டத்துக்கு உட்பட்ட இரணியல், குளித்துறை, தக்கலை, குளச்சல் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது  கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

மேலும், கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு