செய்தி விவரங்கள்

இன்றும் நாளையும் பணிப் பகிஸ்கரிப்பு

அவசரச்சேவை ஊர்தி (Ambulance) சாரதிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இப் பணிப்பகிஸ்கரிப்பு இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படுகிறது என அகில இலங்கை மாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கத்தின் பொது செயலாளர் அமரநந்தா வாட்கே தெரிவித்தார்.

கோரிக்கைகளாவன,

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார திணைக்களக சாரதிகள் 11 பேருக்கு வேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யவேண்டும்.

சகல மாகாணங்களிலும் சுகாதார திணைக்களக சாரதிகள் அத் திணைக்களங்களில் மாத்திரமே பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.

சுகாதார மத்திய அமைச்சர் ராஜித சேனாரத்தினவுடன் நடாத்தப்பட்டப் பேச்சுவார்த்தைக்கு அமைவாக அமைச்சரின் உத்தரவை மாகாண சுகாதாரத் திணைக்களங்களில் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை இப் பணிப்பகிஸ்கரிப்பு வலியுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு