செய்தி விவரங்கள்

லசந்த கொலை விவகாரம் – முக்கியஸ்தர் நீதிமன்றில் முன்னிலை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயகார கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

லசந்த கொலை விவகாரம் – முக்கியஸ்தர் நீதிமன்றில் முன்னிலை

லசந்த விக்ரமதுங்க கொலை இடம்பெற்ற போது, கல்கிஸ்ஸ பிரதேசத்திற்கு அவர் பொறுப்பாக பதவி வகித்துள்ளார்.

குற்றவியல் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியரும், ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு