செய்தி விவரங்கள்

05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை

வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் ஆபத்தான குளவிகள் இருப்பதால் மாணவர்கள் அச்சத்துடன் இருப்பதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை

பாடசாலையின் ஐந்து இடங்களில் இவ்வாறு குளவிகள் காணப்படுவதால் அதனை அழிக்க முடியவில்லை எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டம் - விபுலாநந்தாக் கல்லூரியில் சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இந்த பாடசாலையில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் வாழ்ந்து வருகின்றன.

இது தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.

குளவிகள் இருப்பதனால், பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும் பட்சத்தில் ஆபத்து நேர வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இவை பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. 

எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு