செய்தி விவரங்கள்

கறுப்பு உடையில் மாணவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம நபர்கள்

மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், பாடசாலைக்குச் சென்ற மாணவிகளை மர்ப நபர்கள் சிலர் மிரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதனையடுத்து மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்த மாணவர்கள்  11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். 

இதனால் மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனரெனவும் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தரம் 5,6,7,8,9,10 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் என தெரியவந்துள்ளது. 

கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு