செய்தி விவரங்கள்

காட்டு யானைத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி - மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஆயித்திய மலைப் பொலிஸ் பிரிவின் உன்னிச்சை - கார்மலைப் பகுதியில் இன்று(11.01.2018) அதிகாலை 5 மணியளவில் காட்டு யானைத் தாக்குதலினால் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானைத் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி - மட்டக்களப்பில் சம்பவம்!

ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தைச் சேர்ந்த, 50 வயதுடைய, மாலையர் சின்னத்தம்பி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இவர் மாடுகளைப் பராமரிப்தற்காக பொருட்களை வாங்கிக் கொண்டு அப்பகுதிக்குச் சென்ற போது, காடுகளுக்குள் இருந்து வந்த யானைகளில் ஒன்று தாக்கியதில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு